06
Aug
இது டயாபடீஸ் விரட்டும் யோகா!
நம் மனதில் எழுகிற எண்ணங்களுக்கு ஏற்ப நம் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளின் சுரக்கும் தன்மையிலும் மாறுபாடு ஏற்படும். அதே போல் நாம் உட்கொள்ளும் உணவு, நமது வேலையின் தன்மை இவற்றுக்கு ஏற்பவும் சுரப்பிகளின் சுரக்கும் தன்மையில் மாறுபாடு ஏற்படும். இதனால் வரும் பாதிப்புகளை ஒரு பெயர் வைத்து ஒரு நோயாக அறிவித்துவிடுகிறோம்.
உண்மையில் நமது எண்ணங்களை உணவு பழக்கத்தை மாற்றினாலே ஐம்பது சதவிகிதம் நோய் நீங்கிவிடும். இத்துடன் யோகா பயிற்சியையும் செய்தால் நூறு சதவிகிதம் நோயிலிருந்து விடுதலை பெற்று விடலாம்.
நீரழிவு நோய் எப்படி வருகிறது?
கணையம் என்பது ஒரு சுரப்பி. இது வயிற்றுப்பகுதியில் மண்ணீரலுக்கு சற்று கீழே முதுகுபக்கத்துடன் ஒட்டின மாதிரி அமைந்திருக்கும். இந்த கணையத்தில் ஆல்பா செல், பீட்டா செல் என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில் பீட்டா செல் சுரக்கும் இன்சுலின் ரத்தத்திலுள்ள க்ளுகோஸ் அளவை கட்டுப்படுத்தி சரியான விகிதத்தில் வைத்திருக்கும். இந்த இன்சுலின் குறைந்தால் ரத்தத்தில் க்ளுகோஸ் அளவு ஏறும். இதனை தான் நீரழிவு, டயாபடீஸ் என்று விதவிதமான பெயர்களில் அழைக்கிறோம்.
நீரிழிவு என்பது நிரந்தர வியாதி அல்ல. கணையம் ஒழுங்காக சுரக்க வில்லை. அவ்வளவு தான். அதனை யோகா பயிற்சி மற்றும் உணவு பழக்கத்தால் மீண்டும் ஒழுங்காக இயங்க செய்ய முடியும்.
நீரிழவு வந்தால் தோன்றும் அறிகுறிகள்
- தூக்கமின்மை
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- உடல் எடை குறைதல்
- ஆண் பெண் உறுப்புகளில் அரிப்பு மற்றும் புண் வருதல்
- ஆறாத கால் புண்
- அதிக பசி எடுத்தல்
- அதிக தாகம்
- காலில் வலி, எரிச்சல்
- மதமதப்பு மற்றும் பார்வை கோளாறு
நீரிழிவினால் பாதிக்கப்படும் முக்கிய உறுப்புகளும் அவற்றில் வரும் பிரச்சனைகளும்
- கிட்னியில் பிரச்சனை வந்தால் முகம் மற்றும் காலில் வீக்கம் ஏற்படும், சிறுநீரில் புரதம் போகும், அதிக ரத்த அழுத்தம் ஏற்படும்.
- கண்களில் பிரச்சனை வந்தால் பார்வை மங்குதல், கண்களில் கூச்சம், வலி, அடிக்கடி கண்களில் கட்டி வருதல் ஆகியவை ஏற்படும்.
- மூளையில் பிரச்சனை வந்தால் பக்கவாதம், கை கால் செயலிழப்பு, முகவாதம், தலைசுற்றல், மறதி, ஆகியவை ஏற்படும்.
- இதயத்தில் பிரச்சனை வந்தால் மூச்சு திணறல், நடந்தால் நெஞ்சு வலி, தோள்பட்டை வலி, நெஞ்சு எரிச்சல், படபடப்பு ஆகியவை ஏற்படும்.
- கால்களில் பிரச்சனை வந்தால் காலில் உணர்ச்சி குறைதல், ஆறாத புண்கள், காலில் வெடிப்பு, ஆணி, விரல் இடுக்குகளில் புண், தோல் கருப்பாக மாறுதல் ஆகியவை ஏற்படும்.
கணையம் ஒழுங்காக சுரக்காததற்கு முக்கிய காரணங்கள்
- அளவுக்கு அதிகமாக உண்பது
- பொறித்த நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவது
- எந்த ஒரு உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பது
- அரைகுறையாக மென்று சாப்பிடுவது
- அதிகமாக உடலுறவில் ஈடுபடுவது
- மன அழுத்தம் மற்றும் கவலையாக இருப்பது
- அதிகமாக இனிப்பு சாப்பிடுவது
- பல மணி நேரம் அமர்ந்தே வேலை செய்வது
- அதிகமாக மது அருந்துவது
- பகலில் சாப்பிட்ட உடன் தூங்குவது
- எண்ணெய் தேய்த்து குளிக்காமல் இருப்பது
- அதிகமாக உழைப்பது அல்லது உடலுக்கு வேண்டிய ஓய்வு கொடுக்காமல் இருப்பது
- உறக்கம் சரியாக இல்லாமல் இருப்பது
நீரழிவுக்கு இந்த யோகா செய்யுங்கள் என்று சிம்பிளாக சொல்லிவிட்டு செல்லாமல் எதற்காக இவ்வளவு விஷயங்களை உங்களுக்கு சொல்கிறேன் தெரியுமா? நீரழிவு என்பது என்ன, அந்த வியாதி வந்தால் உடலில் என்னென்ன உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றன, என்னென்ன காரணங்களினால் இந்த வியாதி வருகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டால்தான் இதில் உங்களிடம் என்னென்ன வேண்டாத விஷயங்கள் இருக்கிறது என்று கண்டுபிடித்து அதை சரி செய்ய முடியும்.
நிரிழிவை நீக்கும் வக்ராசனம்
செய்முறை:
- விரிப்பின் மீது இரு கால்களையும் நீட்டி அமரவும்.
- வலது காலை மடித்து வலது கணுக்காலை இடது கால் முட்டியை தொடும்படி பாதத்தை வைக்கவும்.
- உங்கள் வலது கையை முதுகுக்கு பின்னால் கொண்டு வந்து கைவிரல்களை வெளிநோக்கி இருக்கும்படி விரிப்பின் மீது வைக்கவும்.
- இப்போது இடது கையை வலது முட்டியின் வழியாக கொண்டு வந்து வலது கால் கட்டை விரல் அல்லது கணுக்காலை பற்றி பிடிக்கவும்.
- இப்போது உங்கள் தலை தோள்பட்டை ஆகியவற்றை வலதுபக்கம் திருப்பி வலது தோள்பட்டை வழியாக பார்க்கவும்.
- இந்த நிலையில் சாதாரணமாக மூச்சுவிட்டபடியே முப்பது வினாடிகள் இருக்கவும்.
- தலையை திருப்பி கட்டை விரலை விட்டு கையை பிரித்து காலை நீட்டி அமரவும்.
- பின்னால் வைத்த கையையும் எடுத்து இடுப்பு பக்கத்தில் வைத்து ஓய்வில் இருக்கவும்.
- இதற்கு மாற்று ஆசனமாக இடது காலை மடித்து செய்யவும்.
- வலது காலை மடித்து ஒரு தடவை இடது காலை மடித்து ஒரு தடவை செய்யவும்.
முக்கிய குறிப்பு:
வக்ராசனத்தை நிதானமாக செய்யுங்கள். வயதானவர்கள் உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு எடுத்தவுடன் முழுமை நிலை வராது. முடிந்த அளவு பயிற்சி செய்யுங்கள். தொடர்ந்து பயிற்சி செய்தால் ஓரிரு மாதத்தில் முழுமை நிலை வரும்.
பலன்கள்:
- வக்ராசனம் செய்வதால் உடலில் உள்ள கணையம் நன்கு திருகப்படும், நன்று அமுக்கப்படும்.
- அதனால் அந்த இடத்தில ரத்த ஓட்டம் வெப்ப ஓட்டம் காற்றோட்டம் ஆகிய மூன்றும் ஒழுங்காக நடைபெறும்.
- இதனால் கணையம் ஒழுங்காக சுரக்கும், நீரழிவு முதலில் கட்டுக்குள் வரும் பின்பு முழுமையாக குணமடையும்.