குபேர முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 022
உடல் ஆரோக்கியம்
உடல் உள் உறுப்புக்கள் அனைத்தும் நன்கு இயங்கினால் ஆரோக்கியத்தில் உயர்ந்த செல்வந்தனாகலாம். அதற்கு குபேர முத்திரை பயன்படுகிறது.
உள் அமைதி
குபேர முத்திரை செய்தால் புத்தி கூர்மை, நல்ல எண்ணம் உருவாகும், அதனால் உள்ளத்தில் அமைதி கிடைக்கும். அமைதியில் குபேரனாகலாம்.
நரம்பு மண்டலம்
குபேர முத்திரை நரம்பு மண்டலங்களை நன்கு இயங்கச் செய்யும். தூக்கம் நன்கு வரும்.
தனித்திறமை
ஒரு மனிதனுடைய தனித்திறமை இந்த முத்திரையால் வெளிப்படும். அதன் மூலம் வாழ்வில் புகழ், செல்வம் அடையலாம்.
பொறுமை
இந்த முத்திரை பொறுமை, நிதானம் போன்ற பண்புகளை வளர்க்க துணை புரிகின்றது.
அறிவில் மலர்ச்சி
அறிவில் மலர்ச்சி ஏற்படுகின்றது. மனம் இயங்காமல் அறிவுடன் மனம் இணைந்து அறிவாற்றல் வெளிப்படும்படி நமது செயல்கள் அமையும்.
கற்பனை திறன்
ஒரு மனிதனுடைய கற்பனை திறன் நன்கு மலர்ச்சி செய்கின்றது. நாளமில்லா சுரப்பிகள் அணைத்தும் நன்றாக இயங்கச் செய்யும். மனமும் அமைதி பெரும். உடல் ஆரோக்கியத்திலும், உள் அமைதியிலும் செல்வந்தராக வாழலாம்.