02
Sep
குளிர்ச்சி வகை பிராணாயாமம் – சீத்தளி
ஒற்றை தலைவலி, அல்சர் குணமாக்கும் சீத்தளி மூச்சு பயிற்சி
ஒற்றை தலைவலி
ஒற்றை தலைவலி உள்ளவர்கள் இதனை பயின்றால் உடனே குணமாகும். ஒற்றை தலைவலிக்கு முற்று புள்ளி வைக்கும் பயிற்சி இது.
அல்சர் நீங்கும்
அல்சர் வராமல் தடுக்கும். குடல் சூடு வராது. இதனால் அல்சர் உள்ளவர்கள் பயின்றால் விரைவில் குணமாகும்.
மூல நோய்
உடல் சூட்டினால் வரும் மூல நோய் குணமாகும். தொடர்ந்து பயின்றால் மூல நோய் வராது.
மன அழுத்தம் நீங்கும்
மன அழுத்தம், டென்ஷன் நீக்கும். மன அமைதி கிடைக்கும்.
ஜீரணம்
அஜீரண கோளாறு நீங்கும். ஜீரண மண்டலம் நன்கு இயங்கும்.
வெயில் காலத்தில் பலன்
வெயில் காலத்தில் அதிக உஷ்ணம் உடலில் வராமல் உடலில் உஷ்ணத்தை சமப்படுத்துகிறது. உடலும் மனமும் குளுர்ச்சியாக இருக்க செய்கின்றது.
விளக்கம்: யோகக்கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி