நரம்பு தளர்ச்சி நீங்க நடராஜாசனம்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 21
பாத வலி
நடராஜாசனம் செய்தால் பாத வலி, பாத வீக்கம் நீங்கும்.
தோள்பட்டை வலி
தோள்பட்டை வலி நீங்கும். வாயு சம்மந்தமாக தோள்பட்டை வலி வந்தாலும் நீங்கும்.
கை வலி
கை வலி, கை குடைச்சல் நீங்கும்.
மூட்டு வலி
மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். மூட்டுக்கள், மூட்டு சவ்வு நன்றாக இயங்கும்.
கழுத்து வலி
கழுத்து வலி இருந்தால் குணமாகும். கழுத்து வலி வராமல் வாழலாம்.
இடுப்பு வலி
இடுப்பு வலி இருந்தால் தீரும். இடுப்பு வலி வராமல் வாழலாம்.
உடல் எடை
உடல் எடை அதிகமாக இருந்தால் குறையும்.
மன ஒருநிலைப்படும்
மனம் ஒருமைப்படும். பள்ளி மாணவர்களுக்கு நல்ல பலன் தரும்.
ஒரு ஆசனம் உடல் உள் உறுப்புக்கள் அனைத்தும் நன்றாக இயங்கும்
இந்த ஒரு ஆசனம் உடல் உள் உறுப்புக்கள் அனைத்தும் நன்றாக இயங்கச் செய்யும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி