பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் – பகுதி 009
மனம்
மனம் புலன்களின் வழியாக தனது ஆசையை நிறைவேற்றுகின்றது. இதில் முக்கிய புலன் நமது கண்ணும், காதும். இதில் கண்களினால் காணும் அனைத்தையும் மனம் அடையத் துடிக்கிறது.
வைராக்கியம்
வைராக்கியம் மூலம் புலன்களை வெல்லலாம். வைராக்கியம் என்பது பொருட்களின் மீது நாம் வைக்கும் பற்றை விடுவிப்பதாகும்.
தியானம் கைகூட வேண்டுமா?
சிறு, சிறு ஆசைகள், பொருட்கள் மீது உள்ள பற்றுகளிலிருந்து விடு பட வேண்டும். விடுபட்டால் தியானம் கைகூடும்.
ஆசைகள்
ஆசைகளை வரிசைப்படுத்தி தன்னலமான ஆசைகளை நிராகரித்து, பொது நலமான ஆசைகள், பிறருக்கு நன்மை விளைவிக்கும் ஆசைகள் மட்டும் செயல்படுத்த வேண்டும். தன்னலமான ஆசையில் இருந்து விடுபட்டால் அமைதி நிச்சயம் கிட்டும்.
உணவு பொது நலம்
நாம் உண்ணும் உணவு பிறருக்கு தொண்டு செய்ய இந்த உடலில் சக்தி வேண்டும். அதற்குத்தான் உண்கின்றோம். நாம் இரவு தூங்குவது நாளை இந்த உடல் மக்களுக்கு உழைக்க சக்தி வேண்டும். அதற்குத்தான் தூங்குகிறோம் என்ற உணர்வு வேண்டும். நான் சாப்பிடுகிறேன் எனக்கு பிடித்த உணவு இது என்ற நிலை மாறி. இந்த உணர்வு வந்தால் வாழ்வில் அமைதி மலரும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji