பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் – பகுதி 013
யோகா சாதனை செய்யும் மனிதர்கள் உலக வாழ்வும் வாழ்கிறார்கள். ஒரு புறம் தியான அப்பியாசம் மூலம் உள்முகமாக ஒரு இயற்கையை நோக்கி பயணம். மறுபக்கம் உலக வாழ்வு வாழ்கின்றனர். வயது ஆக ஆக உடலை விட்டு உயிரும் பிரிகின்றது.
இந்த ஆன்மிக அனுபவத்துடன் அவர்கள் மீண்டும் பிறக்கிறார்கள். போன பிறவியில் பெற்ற ஆன்மீக அனுபவம் மீண்டும் அவர்களை சம்பிரக் ஞாத சமாதி பயிற்சி செய்ய விருப்பத்தை கொடுக்கின்றது. அப்படி பயிற்சி செய்யும் பொழுது சிலருக்கு சித்துக்கள் கைகூடுகின்றது. பெரும்பான்மையினர் அந்த சித்துகளில் தனது வாழ்நாளை கழிக்கின்றனர். இப்படி இல்லாமல் அவர்கள் மீண்டும் சாதனை செய்து தன்னை உயர்திக் கொள்ள வேண்டும்.
சம்பிரக்ஞாத சமாதி வரை தொட்டு இறந்தவர்கள் உடல் தான் உதிர்ந்துள்ளது.
உயிரில் அந்த அனுபவம் இருக்கும். இவர்களை விதேக முக்தர் நிலை என்று அழைக்கப்படுகின்றனர். அடுத்த பிறவியில் ஆன்ம முக்தர்கள் நிலைக்கு உயரும் வரை உயிரின் ஒளிப்பதிவுகள் தூண்டுதல் செய்து கொண்டே இருக்கும்.
ஒரு மனித பிறவியில் பெற்ற தியான, சமாதி அனுபவ பதிவுகள் அவர்கள் மரணமில்லா பெரு வாழ்வை பெரும் வகையில் உதவிக் கொண்டேதானிருக்கும்.
இதனால் தான் ஒரு தியான மையத்தில் தியானப் பயிற்சி முறை பற்றி ஒரு குரு விளக்கி தியான பயிற்சி அளிக்கும் பொழுது அதில் 100 பயிற்சியாளர்கள் இருந்தால் ஒவ்வொருக்கும் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். அவரவர்கள் போன ஜென்மத்தில் தியானம் செய்து சேர்த்த உயிர் பதிவுகளுக்கு ஏற்ப அடுத்த நிலை கிடைக்கும்.
உயிரின் உள் பதிவுகள் மட்டும் மேலோங்கியிருக்கும். ஒருவன் தான் யார் என்பதை பூரணமாக உணர்வான். முக்தி பெறுவான். அதுவரை இயற்கை நமக்கு துணை நிற்கும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji