முதுகு வலி நீக்கும் யோகச் சிகிச்சை – பகுதி 3
மூன்று வகை முதுகுவலியும் – புஜங்காசனமும்
புஜங்காசனம் மிக அருமையான ஆசனம். இதில் முதுகெலும்பு பின்புறம் நன்கு வளைக்கப்படுகின்றது. இதன் செயல்முறை விளக்கம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
புஜங்காசனமும் சிறுநீரகமும்
இவ்வாசனம் சிறுநீரகம் சிறுநீரகப்பையை திடப்படுத்தும். கோனாடு சுரப்பி நன்கு இயங்கும். அதனால் அதைச்சார்ந்த வெளி உறுப்பு நன்கு இயங்கும். அடிமுதுகு திடப்படும். அடிமுதுகு வலி வராது.
சிறுகுடல் / பெருங்குடலும் – புஜங்காசனமும்
சிறுகுடல் / பெருங்குடல் அமுக்கப்பட்டு புஜங்காசனத்தின் மூலம் நன்கு இயங்கும். அதனால் அதைச்சார்ந்த நடுமுதுகு நன்கு திடப்படும். நடு முதுகுவலி வராது.
இதயம், நுரையீரலும் – புஜங்காசனமும்
இதயம், நுரையீரல் நன்றாக இயங்கச்செய்கிறது புஜங்காசனத்தின் மூலம். அதனால் அதைச்சார்ந்த கழுத்து முதுகு நன்கு திடப்படும். கழுத்து முதுகு வலி வராது.
மூன்று முதுகுத்தண்டு அதை சார்ந்த உள் உறுப்புக்கள் நன்கு இயங்கும். ஏற்கெனவே பகுதி 1, 2, பயிற்சி செய்துவிட்டு பின் பகுதி மூன்று பயிற்சி செய்யுங்கள். இதன் இறுதி சிகிச்சை பகுதி 4 பின்னர் உங்களுக்கு விளக்கப்படும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji