03
Sep
மூட்டு வலி நீக்கும் யோகம்
அந்த காலத்தில் 80-களில் தான், ‘மூட்டுவலி வந்திடுச்சு, உட்கார முடியல, உட்கார்ந்தா எந்திரிக்க முடியலை’ என்று சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு 20-களிலேயே மூட்டுவலி வந்து விடுகிறது. இதற்காக மருத்துவ பரிசோதனைகள், ஏன், அறுவை சிகிச்சை வரை செல்கிறார்கள் சிலர்.
நமது உடலில் உள்ள அசையும் மூட்டுகளில் மிகப் பெரியது முழங்கால் மூட்டு. அதனாலோ என்னவோ நம் முழங்கால் மூட்டில் ஏற்படுகிற வலியை தான் மூட்டுவலி என்கிறோம். அனால் நம் உடலில் உள்ள எந்த ஒரு மூட்டில் வலி வந்தாலும் அதன் பெயர் மூட்டுவலி. குழந்தைகளுக்கு வருவது பெரியவர்களுக்கு வருவது என மூட்டுவலியை இரண்டு வகை இருக்கிறது.
குழந்தைகளுக்கு வரும் மூட்டுவலி
இதில் ரிக்கட்ஸ், போலியோ என இரண்டு வகை உள்ளது.
- ரிக்கட்ஸ் மூட்டுவலி:
- சூரிய ஒளியே படாத அப்பார்ட்மெண்ட், ஏசி போட்ட வீடு, பள்ளிக்கு செல்ல வேன், ஸ்கூலிலும் ஏசி என்று இன்றைய குழந்தைகள் மேல் சூரிய ஒளியே படுவதில்லை. அப்படியே மீறி கொஞ்ச நஞ்சம் பட்டாலும் அதை அவர்கள் போடுகிற பேண்ட், சர்ட், ஷூ ஆகியவை தடுத்து விடுகிறன்றன. இப்படி குழந்தைகளின் மூட்டுகளில் சூரிய ஒளி படாததால் மூட்டில் உள்ள சைனோலியல் என்ற மூட்டுச் சுரப்பி படலம் ஒழுங்காக சுரக்காமல் சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு மூட்டுவலி வந்து விடுகிறது.
- தவிர அவர்களின் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் விட்டமின் ‘D’ பற்றாக்குறை ஏற்பட்டால் ரிக்கட்ஸ் என்ற மூட்டுவலி ஏற்படும். பசியின்மை, உடல் சோர்வு, அடிக்கடி காய்ச்சல், உடலில் வலி, வீக்கம் ஆகிய அறிகுறிகள் குழந்தைகள் அல்லது மாணவர்கள் உடலில் ஏற்பட்டால் அடுத்து மூட்டு வலி வரப்போகிறது என்று அர்த்தம்.
- போலியோ:
- போலியோ வைரஸ் என்ற கிருமி குழந்தைகளை தாக்கினால் முதுத் தண்டிலுள்ள நரம்புகள் பாதிப்படையும். அதனால் கைகள் கால்கள் வலுவிழந்து விடும்.
வயதானவர்கள் வரும்மூட்டு வலி
வயதானவர்களுக்கு மூட்டுத் தேய்மானம் ஏற்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
- ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ்
- மூட்டுக்களில் இருக்கும் எலும்புகள் தேய்ந்துவிட்டால் அதற்கு ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ் என்று பெயர். இவ்வகை தேய்மானம் வந்தால் நடப்பதற்கும் உட்கார்ந்து எழுவதற்கும் மிகவும் கஷ்டமாக இருக்கும். நடந்தால் மூட்டுகளில் வலி, முட்டி வீங்குதல், மூட்டு வலியால் இரவு தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
- ரூமட்டாய்ட் ஆர்த்தரைடிஸ்
- இந்த ரூமட்டாய்டு ஆர்த்தரைடிஸ் எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் வரலாம். மூட்டு, மணிக்கட்டு, கை, கால், விரல்கள் போன்ற இடங்களில் உள்ள மூட்டுகளில் இந்த நோயின் பாதிப்பு இருக்கும்.
- உடலில் உள்ள மூட்டுகள், மணிக்கட்டு, விரல்களில் வீக்கம் ஏற்பட்டு இறுக்கிப் பிடித்தது போல் இருந்தால் அது ரூமட்டாய்டு ஆர்த்தரைடிஸ் அறிகுறி.
- எலும்பு தேய்மானம்
- 40 வயதுக்கு மேற்பட்டவர்களை இந்த நோய் தாக்குகிறது. குறிப்பாக பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. மெனோபாஸ், முதுமை, வேலை எதுவும் செய்யாமல் எப்போதும் சோர்வாக இருத்தல் போன்றவைதான் இந்த பிரச்சனைக்கு காரணம்.
மூட்டு வலிக்கு முக்கிய காரணங்கள் இவை
- அதிக எடை
- மூட்டு தேய்மானம்
- கால்சியம் பற்றாக்குறை
- ரத்தசோகை
- அஜீரண கோளாறு
- வாயுத் தொல்லை
- உடல் உழைப்பே இல்லத்திருத்தல்
- சத்தான உணவு உண்ணாமலிருத்தல்
- அதிகமாக போகத்தில் ஈடுபடுதல்
இனி மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எளிமையான யோகாசனங்கள், உணவு வகைகளை தெரிந்து கொள்வோம்.
உட்கட்டாசனம்
யோகாசனங்கள் செய்தால்
- உடலில் உள்ள கழிவுகள் சரியாக வெளியேறும்
- தசை வாயுக்களும் சரியாக இயங்கச் செய்யும்
- மலச்சிக்கல் வராது.
யோகாசனம் செய்யாதவர்களுக்கு
- மலச்சிக்கல் வரும்
- கழிவுகள் ஒழுங்காக வெளியேறாது
- அதனால் கழிவுகளின் அசுத்த காற்று மூட்டுகளில் வாயுவாக செயல்பட்டு மூட்டின் இயக்கத்தை பாதிக்கும்.
உட்கட்டாசனம் செய்முறை:
- விரிப்பில் கிழக்கு நோக்கி நேராக நிற்கவும்
- இரு கால் பாதங்களையும் சேர்த்து வைத்து கொள்ளவும்
- இரு கைகளையும் ஒரு அடி அகலத்தில் முன்னாள் நீட்டவும்
- ஒரு நாற்காலியில் அமர்வது போல் மெதுவாக உடலை கீழே கொண்டு வரவும்
- இந்த சமயத்தில் சாதாரணமாக மூச்சு விட்டபடி இருபது வினாடிகள் இருக்கவும்
- உங்கள் உடல் எடை முழுவதும் குதிகாலில் கொடுக்கவும்
- பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும்
- இதுபோல் மூன்று தடவை செய்ய வேண்டும்
இந்த ஆசனத்தின் பலன்கள், யாரெல்லாம் இந்த ஆசனத்தை செய்யலாம் – செய்யக்கூடாது? அவை அடுத்த இதழில்…