இளமைக்கு ஹலாசனம்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 29
இளமை சுறுசுறுப்பு
ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் எவ்வளவு வயதானாலும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழ வேண்டுமெனில் ஹலாசனம் செய்யுங்கள்.
அட்ரீனல் சுரப்பி நன்கு சுரக்கும்
ஹலாசனத்தில் அட்ரீனல் சுரப்பி சரியாக சுரக்கச் செய்கிறது. உடலில் நீரின் தன்மை சரியாக இருக்கும்.
இரத்த அழுத்தம்
ஹலாசனம் செய்தால் இரத்த அழுத்தம் வராது. எவ்வளவு வயதானாலும் இரத்த அழுத்தமின்றி வாழலாம்.
கழுத்து வலி
இந்த ஆசனத்தை முறைப்படி மாணவப்பருவத்திலேயே பயின்றால் கழுத்துவலி வராமல் வாழலாம்.
முதுகு வலி
அடி முதுகு பலம் பெரும். முதுகு வலி வராமல் வாழலாம்.
இரத்த சுத்திகரிப்பு
நமது இரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் வெளியேறுகின்றது. இரத்தம் சுத்தமடையும்.
பெண்களுக்கு
இளம் வயதிலேயே பெண்கள் பயின்றால் என்றும் இளமையுடன் வாழலாம். திருமணமானபின் சுகப்பிரசவம் உண்டாகும். இளமை எப்போதும் நீடிக்கும்.
நல்ல சிந்தனை
தைமஸ் சுரப்பி நன்கு சுரக்கும். தூய சிந்தனையுடன் தன்னம்பிக்கையுடன் வாழலாம்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji