எது ஆன்மிக வாழ்வு
நம் வாழ்வில் ஆன்மிகம் – 05
மனிதன்
மனதை இதயத்தில் வைத்து வாழ்பவன் மனிதன்
ஆன்மிகம்
நமது எண்ணம் – சொல் – செயல் – நமக்கும், பிறருக்கும் நன்மை விளைவிக்கும்படி வாழ்தலே ஆன்மிகம். அன்பு விரிவடைதல். அனைவரையும் நேசித்தல் ஆன்மீகம்.
மனிதர்கள் வகை – உறவு
நான்கு வகை மனிதர்கள் உலகில் உள்ளனர்.
மகிழ்ச்சியுடன் வாழ்பவர் – நட்பு கொள்ள வேண்டும்
துன்பப்படுபவர்கள் – அனுதாபம் காட்டி உதவி செய்தல்
தர்மவான்கள் – நண்பர்கள்
கொடியவர்கள் – விலகிவிடுங்கள்
மனிதர்களுக்கு சேவை
நாம் அனைவரும் தொண்டர் குலம். நாம் உண்ணும் உணவிற்கு பின்னால் விவசாயிகளின் உழைப்பு உள்ளது. நாம் அணியும் சட்டைக்கு பின்னால் பல மனிதர்களின் உழைப்பு உள்ளது. நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு எதாவது ஒரு உதவி செய்ய வேண்டும்.
உண்மையான ஆன்மிகம்
நமது எண்ணங்களை ஆராய்ந்து, நல்ல எண்ணங்களை வளர்த்து, நல்ல பண்புள்ளவனாக வாழ்வது, அன்பை விரிவடைய செய்வதே ஆன்மிகம். ஆன்மீகவாதிகளாக எல்லோரும் இருந்தால் நமது நாடு வல்லரசாக மாறும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji