31
Jul
நலம் தரும் நாடி சுத்தி – முதல் சுற்று – ஆஸ்துமா சைனஸ் நீக்கும்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 010
ஆஸ்துமா
ஆஸ்துமாவிற்கும், சைனஸ் மூக்கடைப்பிற்கும் இந்த நாடி சுத்தி முற்றுப்புள்ளி வைக்கிறது. ஒரு மண்டலத்தில் (48 நாட்கள்) நல்ல பலன் தரும்.
மன அமைதி
இந்த நாடி சுத்தியால் மனம் அமைதியடையும். இரத்த அழுத்தம் நீங்கும்.
தியானம் கை கூடும்
தியானத்தில் லயித்து ஆத்மானந்தம் அடைய இந்த நாடி சுத்தி நல்ல உதவி செய்கிறது. எண்ணங்களை ஒடுங்க செய்கின்றது.
நுரையீரல், இதயம் பாதுகாப்பு
நுரையீரல், இதயம் நன்கு இயங்க இந்த நாடி சுத்தி உதவி புரிகின்றது. இதய அடைப்பு, இதய ஓட்டை முதலியவற்றை வராமல் தடுக்கிறது.
மூளை செல்கள்
மூளை செல்களுக்கு இரத்த ஓட்டம் நன்கு பாய்கிறது. வலது இடது மூளை இரண்டும் நன்றாக இயங்கும்.
சூரிய நாடி சந்திர நாடி
உடலில் சூரிய நாடி மூலம் உஷ்ணமும் சந்திர நாடி மூலம் குளிர்ச்சியும் சமமாக இயங்க உதவி செய்கிறது.