நாளமில்லா சுரப்பிகள் நன்கு இயங்க அர்த்த சக்ராசனம்
மனித உடல் சக்கரமும் நாளமில்லா சுரப்பியும்
மனித உடலில் உள்ள முக்கிய சக்கரமும் மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரை ஒவ்வொரு சக்கரமும் அது தொடர்புடைய நாளமில்லா சுரப்பியும் விளக்கப்பட்டுள்ளது.
அர்த்த சக்ராசனம் சிறப்பு பலன்கள்
எல்லா நாளமில்லா சுரப்பியும் நன்றாக இயங்க இந்த ஆசனம் பயன்படுகிறது. இந்த ஒரு ஆசனம் உடலில் உள்ள முக்கியமான மையங்களையும் அது தொடர்புடைய சுரப்பிகள் பிட்யூட்டரி, பினியல், தைரொய்ட், தைமஸ், அட்ரினல், கோனாடு சுரப்பி நன்றாக சரியான விகிதத்தில் சுரக்க செய்யும். சுறுசுறுப்பாக உற்சாகமாக வாழலாம்.
தீரும் நோய்கள்
இரத்த அழுத்தம், நீரழிவு கட்டுப்படுத்தும். இதயம் பாதுகாக்கப்படும். கழுத்து வலி வராது, முதுகு தண்டு நன்கு இயங்கும். முகம் பொலிவாக இருக்கும். இளமையுடன் வாழலாம். ஒரு ஆசனம் எல்லாவித உடல் உறுப்பும் நன்றாக இயங்க செய்யும்.
கழிவுகள்
உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். உயர் நிலை ஆசனமிது. தக்க குருவிடம் நேரடியாக பயில்வது உத்தமம்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji