02
Apr
நீரிழிவு நீக்கும் பவன முக்தாசனம்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 002
இந்த ஆசனம் பாங்க்ரியாஸ் (கணையத்தை) நன்கு இயங்க செய்கிறது. கணையத்திலுள்ள ஆல்பா செல், பீட்டா செல் இன்சுலினை சுரக்கிறது. அதை சரியான அளவு சுரக்க செய்கிறது.
அஜீரண கோளாறு
இந்த ஆசனத்தில் வயிறு அமுக்கப்படுவதால் அஜீரணக் கோளாறு, வயிறு உப்பிசம் நீங்குகின்றது.
மூட்டுவலி
இரு கால் மூட்டுக்களின் சவ்வும் நன்கு இயங்கும். மூட்டுக்கள் பலம் பெரும். மூட்டு வலி நீங்குகிறது.
வாயு கோளாறு
உடலில் தசவாயுக்களும் சரியாக இயங்குகின்றது.
உடல் அதிக எடை
“தொந்தி வியாதிக்கு தந்தி” என்பது பழமொழி. தொப்பையை குறைக்கும் அருமையான ஆசனம்.
சுறுசுறுப்பு
என்றும் சுறுசுறுப்புடன் திகழலாம். நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கலை நீக்குகிறது. கழிவுகள் உடலில் சரியாக வெளியேறும்.