பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் – பகுதி 008
மன அலைகள்
மனதில் எழும் 5 வகையான மன அலைகளை (சரியான அறிவு, தவறான அறிவு, சொல் மயக்கம், தூக்கம், நினைப்பு) வைராக்கிய அப்பியாசம், சாதனை மூலம் அடக்க முடியும்.
மன அலைகளை விருத்தியக்காமல் அதனை சித்த வடிவமாக நிலை பெற வைக்கும் பயிற்சி வைராக்கியம்.
எண்ணங்களை ஆராய்தல்
எண்ணங்களை ஆழ்ந்து கவனித்து நல்ல எண்ணங்களை மட்டும் செயல்படுத்த வேண்டும்
தொடர் சாதனை
யோகப் பயிற்சிக்குரிய முதல் தகுதியே பயிற்சியை நீண்ட காலம் இடைவிடாமல் பயில்வதாகும்
கழிவுகள்
உடல் கழிவுகள், மனக் கழிவுகள் நீங்கி உடல், மன சுத்தமடைய நீண்ட நாட்கள் இடைவிடாது பயிற்சி செய்ய வேண்டும். அதற்கு வைராக்கியம் அவசியம். அதனுடைய தியானம் விளக்கப்பட்டுள்ளது. ஆன்மிகத்தில் வெற்றியடைய, தியானம் முழுமையாக கை கூடுவதற்கு இடைவிடாத தீவிரமான பயிற்சி சாதனை அவசியம்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji