முத்திரை திறன் மேலாண்மை அறிவியல் சிறப்பம்சங்கள்
நாம் பல படிப்புகள் படித்து, பட்டங்கள் பெறுகிறோம். உயர் பதவிகளில் வகிக்கின்றோம், கை நிறைய சம்பளம் பெறுகின்றோம். எல்லா வசதிகளும் வந்துவிட்டது, நாம் நினைத்தால் உலகில் எந்த பொருளையும் வாங்க முடியும், ஆனால் உடலில் ஆரோக்கியம் குறைந்து கொண்டே வருகின்றது.
கணையம் ஒழுங்காக இயங்கவில்லை, அதனால் நீரிழிவு வந்துவிட்டது, மன அழுத்தத்தினால் இரத்த அழுத்தம் வந்துவிட்டது, நரம்பு தளர்ச்சி, முதுகு வலி, மூட்டு வலி, இதயம் பாதிப்பு, இதனால் மரணத்தைபற்றிய பயமும் வந்துவிட்டது, மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை, இத்தனை வருடங்கள் பயின்ற படிப்பு என்ன பலன்? அப்படியென்றால் முதல் படிப்பு எது? தனது உடலையும், மனதையும், வளமாக, நலமாக வைத்துக்கொள்வது எப்படி, இதுவே முதல் படிப்பாக இருந்திருந்தால், நாம் இன்று பெரிய பணக்காரராகவும் இருக்கலாம், அதே சமயத்தில் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழலாம். எனவே நமது உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம், உடலையும், மனதையும் செம்மையாக எப்படி வைத்து கொள்வது என்ற கல்வியை ஒரு மனிதன் பயில வேண்டும். அதுவே முதல் கல்வியாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த முத்திரை திறன் மேலாண்மை அறிவியல் பயிற்சி, மிக அற்புதமான பயிற்சியாகவும், இதில் உங்கள் உடலைப்பற்றிய அறிவு, மனதை பற்றிய அறிவு, ஆன்மாவை பற்றிய அறிவு, இதில் உள்ளது, அரோக்கியமாக வாழ நமது கை விரல்கள் எப்படி பயன்படுகின்றது என்பதை அறியலாம்.
பிறருக்கு இதனை எப்படி பயிற்றுவிப்பது என்பதையும் பயிலலாம், நீங்களும் ஆரோக்கியமாக வாழலாம், மற்றவர்களையும் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்யலாம்.
இப்பயிற்சியின் சிறப்பம்சங்கள்
- மன அழுத்தத்திலிருந்து விடுதலையடைய முத்திரை,
- நீரிழிவு நீக்கும் முத்திரைகள்,
- இரத்த அழுத்தம் நீக்கும் முத்திரைகள்,
- மூட்டு வலி, முதுகு வலி, கழுத்து வலி நீக்கும் முத்திரைகள்,
- குடலிறக்கம் வராமல் வாழ முத்திரைகள்,
- மாணவர்களுக்கான முத்திரைகள்,
- அல்சர், கேன்சர் வராமல் வாழும் முத்திரைகள்,
- நரம்பு தளர்ச்சி நீக்கும் முத்திரைகள்,
- மாதவிடாய் பிரச்சனை, நீர்க்கட்டி பிரச்சனை, பெண்களுக்கு வராமல் பாதுகாக்கும் முத்திரைகள்,
- சுகப்பிரசவம் உண்டாக முத்திரைகள்
- தொற்று கிருமிகள், வைரஸ் தாக்காமல் வாழ முத்திரைகள்,
- மன அமைதி தரும், ஆத்மானந்தமடையும் முத்திரைகள்,
மேற்கண்ட நோய்கள் நிறைய மனிதர்களுக்கு இருக்கின்றது, இதற்கு நிரந்திர தீர்வு காணாமல் தவிக்கின்றனர், அத்தனை வியாதிக்கும் முத்திரை தீர்வு கொடுக்கும், இதனை பயின்றால் நீங்கள் தான் உண்மையான மருத்துவர், முதலில் உங்கள் குடும்பத்திலுள்ளவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம்.
வேலை வாய்ப்பு
இந்த பயிற்சியை முடித்தால் NISM மூலம் திறன் சான்றிதழ் கிடைக்கும், இதன் மூலம் நீங்கள் யோகா பயிற்சி மையம் வைத்து மக்களுக்கு பயிற்றுவிக்கலாம், தொழில் நிறுவனங்களில் (CORPORATE COMPANY YOGA) முத்திரை பயிற்சியை கற்றுக்கொடுக்கலாம், மருத்துவமனைகளில் பகுதி நேரமாக முத்திரை பயிற்சியை நோயாளிக்கு கற்றுக் கொடுக்கலாம். பள்ளி, கல்லூரிகளில், பகுதி நேர முத்திரை பயிற்சி பயிற்றுவிக்கலாம், மக்களுக்கும் பயிற்றுவிக்கலாம், மன அமைதி கிடைக்கும், பொருளாதாரமும் உங்களுக்கு கிடைக்கும், வாழ்வாதாரம் நன்றாக இருக்கும்.