ஆண்மைக்குறை நீக்கும் யோகா (Yoga for Impotency Cure)

சர்வாங்காசனம் செய்முறை:

 1. விரிப்பின் மீது கால்களை ஒன்று சேர்த்து படுக்கவும்.
 2. கால்களை 90 டிகிரி உயர்த்தவும்.
 3. இப்போது உங்கள் உள்ளங்கைகளை அழுத்தி இடுப்பை பூமியிலிருந்து உயர்த்தி கால்களை பூமியை நோக்கி முன்புறமாக கொண்டு வரவும்.
 4. கைகளை மடக்கி உள்ளங்கைகளால் இடுப்பை பிடித்து கால்களை 90 டிகிரிக்கு உயர்த்தவும்.
 5. உடம்பும் கால்களும் ஒரே நேர்கோட்டில் வரும்படி உடல் பளுவை தோள்பட்டையில் வைத்து சரி செய்ய வேண்டும்.
 6. கைமுட்டிகள் தரை மீது இருக்க வேண்டும்.
 7. 50 முதல் 100 எண்ணிக்கை அப்படியே ஆடாமல் இருக்க வேண்டும்.
 8. கண்கள் திறந்து கால் விரல்களை பார்க்க வேண்டும்.
 9. பின் கால்களை மெதுவாக பூமியை நோக்கி பின்புறமாக கொண்டு வந்து, முதுகிலுள்ள கைகளை பிரித்து விரிப்பின் மீது மெதுவாக முதுகை வைத்து படுத்து, கால்களை விரிப்பின் மீது வைக்கவும்.
 10. சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு திரும்பவும் செய்ய வேண்டும்.
 11. 2 முறை செய்துவிட்டு சவாசனத்திற்கு வரவும்.

குறிப்பு:

இந்த சர்வாங்காசனத்திற்கு ஒரு மாற்றாசனம் மட்ச்சியாசனம் சேர்த்து செய்வது நலம் விளைவிக்கும்.

மட்ச்சியாசனம் செய்முறை

 1. விரிப்பில் நேராக படுத்துக் கொள்ளவும். இரு கால்களும் சேர்ந்திருக்கட்டும்.
 2. கைகளை பக்கவாட்டில் வைக்கவும். கைகளின் உதவியால் தலையை அதாவது உச்சந்தலையை தரையில் படும்படி வளைக்கவும்.
 3. இரு கைகளையும் இரு கால் தொடை மீது வைத்து சாதாரண மூச்சில் 20 வினாடிகள் இருக்கவும்.
 4. பின் இரு கைகளின் உதவியால் தலையை மெதுவாக சீராக விரிப்பில் வைக்கவும்.

பலன்கள்:

 1. தைரொய்ட், பாரா தைரொய்ட் சிறப்பாக இயங்கும்.
 2. ரத்த ஓட்ட மண்டலம், ஜீரண மண்டலம் ஆகியவை சிறப்பாக செயல்படும்.
 3. சொப்பன ஸ்கலிதம், மற்றும் துரித ஸ்கலிதம் என்னும் விந்து நஷ்டத்தை போக்கி பிரம்மச்சரியத்தை பின்பற்ற உதவும்.
 4. மர்மஸ்தானம் குத்தம் ஆகிய இடங்களில் தோன்றும் வியாதிகள் குணமாகும்.
 5. கிட்னி கோளாறுகள் சரி செய்யும்.
 6. மூத்திர கோளாறை சரி செய்யும்.
 7. ரத்தமின்மை வியாதியை போக்கும்.
 8. காது, மூக்கு, தொண்டை சிறப்பாக செயல்படும்.
 9. உடல் எடை குறைக்கும். என்றும் இளமையுடன் வாழலாம்.
 10. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
 11. ஆஸ்துமா நீங்கும்.
 12. கல்லீரல் கோளாறு நீங்கும்.
 13. சர்க்கரை வியாதி நீங்கும்.
 14. தலைமுடி கொட்டுதல் இளநரை கட்டுப்படுத்தும்.
%d bloggers like this: