கண் ஒளி அளிக்கும் கண்கண்ட யோகா – திரிகோணாசனம்

செய்முறை:

  1. விரிப்பில் கிழக்கு நோக்கி இரு அடி கால்களை அகற்றி நிற்கவும்.
  2. கைகளை பக்கவாட்டில் நேராக நீட்டவும்.
  3. இப்போது மூச்சை வெளிவிட்டு கொண்டு இடது கையால் வலது கால் பெருவிரலை தொடவும்.
  4. வலது கையை மேல் நோக்கி வைத்து உங்கள் கண்களால் வலது கை விரலை இருபது வினாடிகள் பார்க்கவும்.
  5. பின் மெதுவாக மூச்சை உள் இழுத்து சாதாரண நிலைக்கு வந்து மூச்சை வெளிவிடவும்.
  6. இதே போல் மூச்சை வெளியிட்டு வலது கையால் இடது காலை தொடவும்.
  7. இடது கையை மேல் நோக்கி வைத்து உங்கள் கண்களால் இடது கைவிரலை இருபது வினாடிகள் பார்க்கவும்.
  8. பின் மெதுவாக மூச்சை உள் இழுத்து நிமிர்ந்து சாதாரண நிலைக்கு வரவும்.
  9. இதே போல் மூன்று முறைகள் பயிற்சி செய்யவும்.

பலன்கள்:

  1. கண்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது.
  2. கண்கள் குளிர்ச்சியடைகின்றது.
  3. கண்களிலுள்ள தூசிகள் அழுக்குகள் வெளியாகின்றது.
  4. உடலின் கொழுப்பை குறைக்கும்.
  5. முதுகு வலி நீங்கும்.
  6. கால் முட்டுக்கள் பலமடையும்.
  7. ஜீரண சக்தி அதிகரிக்கும்.
  8. மன அழுத்தம் நீக்கும்.

கண்கள் நன்கு இயங்க சாப்பிட வேண்டிய பழங்கள்:

பப்பாளி, அன்னாசி, மாம்பழம், திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, மாதுளை, சாத்துக்குடி.

கண்கள் நன்கு இயங்க சாப்பிட வேண்டிய காய்கறிகள்:

கேரட், முருங்கை, வெங்காயம், அவரை, பீன்ஸ், வெண்பூசணி.

கண்கள் நன்கு இயங்க சாப்பிட வேண்டிய கீரைகள்:

கறிவேப்பிலை, பொன்னாங்கன்னி, வில்வம், கொத்தமல்லி, கீழாநெல்லி, வல்லாரை.