கழுத்துவலி நீக்கும் யோகக்கலை (Neck Pain Cure Yoga)
பயிற்சி 1 – இடுப்பை உயர்த்தும் பயிற்சி:
  1. விரிப்பில் முதலில் நேராக படுத்து கொள்ளவும்.
  2. இரு கால்களையும் மடக்கவும்.
  3. ஒரு அடி இடைவெளி விட்டு கால் பாதங்கள் தரையில் இருக்கவும்.
  4. இரு கைகளையும் குதிகால் பக்கத்தில் கைவிரல் படும்படி வைக்கவும்.
  5. இப்போது மூச்சை உள் இழுத்துக் கொண்டு இடுப்பை மட்டும் உயர்த்தவும்.
  6. இந்நிலையில் பத்து விநாடிகள் மூச்சடக்கி இருக்கவும்.
  7. பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும்.
  8. இது போல் மூன்று முறை செய்யவும்.
பயிற்சி 2
  1. பயிற்சி ஒன்றில் செய்தபடி முதலில் இடுப்பை உயர்த்தவும்.
  2. பின் இரு கைகளையும் தலைக்கு பின்னால் கட்டி கொள்ளவும்.
  3. அந்நிலையில் மூச்சடக்கி பத்து விநாடிகள் இருக்கவும்.
  4. பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும்.
  5. இது போல் மூன்று முறைகள் செய்யவும்.
பயிற்சி 3 – வஜ்ராசனத்தில் கையை உயர்த்துதல்:
  1. விரிப்பில் முதலில் வஜ்ராசனத்தில் அமரவும்.
  2. இப்போது இருகைகளையும் கோர்த்து காதோடு உயர்த்தி தலைக்கு மேல் வைக்கவும்.
  3. கை விரல்களும் பின்னி உள்ளங்கை வானத்தை பார்க்க வேண்டும்.
  4. கைகள் காதோடு சேர்ந்து நேராக இருக்க வேண்டும்.
  5. இப்போது இரு நாசி வழியாக மூச்சை உள் இழுக்கவும்.
  6. உடன் இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும்.
  7. முதலில் ஐந்து முறைகள் மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளியேவிடவும்.
  8. பின் வேகமாக மூச்சை உள் இழுத்து வேகமாக மூச்சை வெளிவிடவும் ஐந்து முறைகள்.
  9. பின் மீண்டும் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
  10. பின் சாதாரண நிலைக்கு வரவும்.
பலன்கள்:
  1. கழுத்து வலி நீங்கும்.
  2. கழுத்து தசை பிடிப்பு நீங்கும்.
  3. நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்கும்.
  4. கோபம் டென்ஷன் பதட்டம் நீங்கும்.
  5. நாடி துடிப்பை மிதமாக்கும்.
  6. சுவாசத்தை சீராக்கும்.
  7. ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
  8. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
#yoga #pathanjaliyoga #yogasana #asanatherapy #therapy #yogatherapy #neckpain #neckpainyoga #patanjali #pathanjali #patanjaliyoga #vajrasana #vajrasanam