சாந்தி ஆசனம் – மன அழுத்தம் நீக்கி மன அமைதி தரும் யோகாசனம்
இன்றைய நவ நாகரீக பரபரப்பான உலகில் மன அழுத்தம், அதனால் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய கோளாறு போன்ற நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் ஏராளம். இவர்கள் அனைவரும் சாந்தி ஆசனம் கட்டாயம் செய்ய வேண்டும். இக்கலியுகத்தில் வாழும் அனைவரும் சாந்தி ஆசனம் நிச்சயம் செய்ய வேண்டும். செய்தால் மன அழுத்தம் இல்லாமல், ரத்த அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம்.
சாந்தி ஆசனம் செய்முறை:
 1. விரிப்பில் கிழக்கு திசை நோக்கி தலை வைத்து, மேற்கில் கால் வைத்து, கை கால்களை அகற்றி படுத்து கொள்ளவும்.
 2. தலையை லேசாக இடப்பக்கம் சாய்த்து கொள்ளவும்.
 3. கைவிரல்கள் வானத்தை பார்த்து இருக்கவும்.
 4. கண்களை மூடிக் கொள்ளவும்.
 5. இப்போது உங்கள் மனதை நண்பனாக்கி மனதின் மூலம் கீழ்கண்டவாறு பயிற்சி செய்யவும்.
 6. உங்கள் மனதை தலை வெளி தசைகளில் நிலை நிறுத்தவும். அதில் உள்ள எல்லா டென்ஷனையும், அழுத்தங்களையும் பூமிக்கு அர்பணித்துவிட்டேன், அதில் எந்த டென்ஷனும் இல்லை என்று ரிலாக்ஸ் செய்யவும் எண்ணத்தினால்.
 7. பின்பு உங்கள் மனதை தொண்டை வெளி சதையில் நிலை நிறுத்தவும். அதிலுள்ள டென்ஷன், அழுத்தம் அனைத்தையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி உடலை தளர்த்தவும்.
 8. பின்பு உங்கள் மனதை தோள்பட்டை வெளி சதையில் நிலை நிறுத்தவும். அதிலுள்ள டென்ஷன், அழுத்தம் அனைத்தையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி உடலை தளர்த்தவும்.
 9. பின்பு உங்கள் மனதை வலது கை, இடது கை வெளி சதையில் நிலை நிறுத்தவும். அதிலுள்ள டென்ஷன், அழுத்தம் அனைத்தையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி உடலை தளர்த்தவும்.
 10. பின்பு உங்கள் மனதை இருதயத்தின் வெளி சதையில் நிலை நிறுத்தவும். அதிலுள்ள டென்ஷன், அழுத்தம் அனைத்தையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி உடலை தளர்த்தவும்.
 11. பின்பு உங்கள் மனதை வயிற்று வெளி சதையில் நிலை நிறுத்தவும். அதிலுள்ள டென்ஷன், அழுத்தம் அனைத்தையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி உடலை தளர்த்தவும்.
 12. பின்பு உங்கள் மனதை வலது கால், இடது கால் வெளி சதையில் நிலை நிறுத்தவும். அதிலுள்ள டென்ஷன், அழுத்தம் அனைத்தையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி உடலை தளர்த்தவும்.
 13. தலை முதல் கால் வரை உடல் வெளி தசைகளில் இருந்த அழுத்தத்தை மனதால் ரிலாக்ஸ் செய்து விட்டோம். இப்போது, உடல் உள் உறுப்புக்களை தளர்த்துதல்.
 14. இப்போது உங்கள் மனதை மூளை உள் பகுதியில் நிலை நிறுத்தி அந்த பகுதியிலுள்ள எல்லா டென்ஷன், அழுத்தம் உடலைவிட்டு நீங்குவதாக எண்ணி தளர்த்தவும்.
 15. ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்.
 16. மூளைக்கு கீழ் இரண்டு நாளமில்லா சுரப்பிகள் பிட்யூட்டரி மட்டும் பினியல் சுரப்பி உள்ளது. உங்கள் ஆழ் மனதை அதில் நிலை நிறுத்தி அந்த சுரப்பியில் உள்ள டென்ஷன் வெளியேறுவதாக தளர்த்தவும்.
 17. பின் உங்கள் மனதை தொண்டை உள் பகுதி தைரொய்ட், பாரா தைரொய்ட் அதில் நிலை நிறுத்தி அதிலுள்ள எல்லா டென்ஷன் வெளியேறுவதாக எண்ணி தளர்த்தவும்.
 18. பின் இருதயம், நுரையீரல், தைமஸ் சுரப்பி அதில் உங்கள் மனதை நிலை நிறுத்தி, அதிலுள்ள எல்லா டென்ஷனும் வெலியேறுவதாக எண்ணி தளர்த்தவும்.
 19. எனது இதய துடிப்பு சீராக இயங்குகிறது. அந்த பகுதியில் எந்த டென்ஷனும் இல்லை என்று எண்ணி தளர்த்தவும்.
 20. பின் வயிற்று உள் பகுதி சிறுகுடல், பெருங்குடல், கணையம், அட்ரினல் சுரப்பியில் நிலை நிறுத்தி அதிலுள்ள எல்லா டென்ஷனும் வெளியேறுவதாக மனதால் நினைத்து தளர்த்தவும்.
 21. பின் வலது கால் உள்பகுதி, இடது கால் உள்பகுதியில் மனதை நிலை நிறுத்தி அதிலுள்ள எல்லா டென்ஷனும் வெளியேறுவதாக எண்ணி தளர்த்தவும்.
சாந்தி ஆசனம் பலன்கள்:
 1. ரத்த அழுத்தம் நீங்கும்.
 2. நீரிழிவு நீங்கும்.
 3. இதயம் பாதுகாக்கப்படும்.
 4. மன அழுத்தம் நீங்கி, மன அமைதி கிடைக்கும்.
 5. உடலுக்கு பிராண சக்தி கிடைக்கின்றது.
 6. உடலில் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், சரியாக இயங்கும்.
 7. நரம்பு தளர்ச்சி, படப்படப்பு நீங்கும்.
 8. கோபம் நீங்கும். சாந்தம், பொறுமை குணம் வளரும்.
 9. அடிமுதுகு வலி, கழுத்து, முதுகு வலி நீங்கும்.
 10. சுறுசுறுப்பாக திகழலாம்.
 11. எல்லா வயதினரும் இதனை பயின்று இன்புற்று அமைதியாக வாழலாம்.

 

%d bloggers like this: