செய்முறை:
- விரிப்பின் மீது இரு கால்களையும் நீட்டி அமரவும்.
- வலது காலை மடித்து வலது கணுக்கால் இடது கால் முட்டியை தொடும்படி பாதத்தை வைக்கவும்.
- உங்கள் வலது கையை முதுகுக்கு பின்னால் கொண்டு வந்து கை விரல்களை வெளி நோக்கி இருக்கும்படி விரிப்பின் மீது வைக்கவும்.
- இப்போது இடது கையை வலது முட்டியின் வழியாக கொண்டு வந்து வலது கால் கட்டைவிரல் பற்றி பிடிக்கவும்.
- இப்போது உங்கள் தலை, தோல்பட்டை ஆகியவற்றை வலது பக்கம் திருப்பி வலது தோள்பட்டை வழியாக பார்க்கவும்.
- சாதாரண மூச்சில் முப்பது எண்ணிக்கை முதலில் இருக்கவும்.
- தலையை திருப்பி கட்டை விரலை விட்டு கையை பிரித்து காலை நீட்டி அமரவும்.
- பின்னால் வைத்த கையையும் எடுத்து இடுப்பு பக்கத்தில் வைத்து ஓய்வு எடுக்கவும்.
- இதற்கு மாற்று ஆசனமாக இடது காலை மடித்து செய்யவும்.
- வலது கால் மடித்து ஒரு தடவை, இடது கால் மடித்து ஒரு தடவை செய்யவும்.
பலன்கள்:
- கணையம் சிறப்பாக இயங்கும்.
- தொப்பை குறையும்.
- கிட்னி பலம்பெறும்.
- கண் பார்வை தெளிவடையும்.
- இதயம் பாதுகாக்கும்.
- மன அழுத்தும் நீங்கும்.
- தூக்கமின்மை சீராகும்.