பிருத்வி முத்திரை
செய்முறை:
- விரிப்பில் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி நிமிர்ந்து உட்காருங்கள்.
- வஜ்ராசனம் அல்லது பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
- கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியே விடவும்.
- பின் பெருவிரல் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டு அழுத்தம் கொடுக்கவும்.
- மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும்.
- இரு கைகளிலும் இவ்வாறு செய்யவும்.
- முதலில் 3 நிமிடங்கள் செய்யவும்.
- பின் 5 முதல் 10 நிமிடங்கள் வரை இந்நிலையில் இருக்கலாம்.
- காலை, மதியம், மாலை மூன்று நேரம் சாப்பிடும் முன் செய்யலாம்.
- மூன்று வேளை செய்ய முடியாதவர்கள் இரு வேளை செய்யலாம்.
பலன்கள்:
- தோல் பளபளப்பாகும்.
- உடல், மன சோர்வு நீங்கும்.
- மிகவும் மெலிந்து பலவீனமாய் உள்ளவர்கள் இந்த முத்திரை செய்தால் உடல் எடை படிப்படியாக கூடும்.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
- வாயு தொல்லை தீரும்.
- சைனஸ் நீங்கும்.
- மூட்டு வாதம், மூட்டு வலி தீரும்.
- நரம்பு பலவீனம் குணமாகும்.
- கழுத்து, முதுகெலும்பு திடம்பெறும்.
- முகம் நல்ல பொலிவுடன் இருக்கும்.
- உடல் வெப்பம் சம நிலையில் இருக்கும்.
- உணவு எளிதில் ஜீரணமாகும்.
- மனதில் தெளிவு கிடைக்கும்.
- பொறுமை மற்றும் தன்னம்பிக்கை கிடைக்கும்.