பெண்களின் கருப்பை மற்றும் மாதவிடாய் பிரச்சனை நீக்கும் யோகக்கலை

பச்சிமோத்தாசனம்

செய்முறை:

 1. விரிப்பில் கால்களை நீட்டி கிழக்கு திசை நோக்கி அமரவும்.
 2. கைகளை பக்கவாட்டில் கொண்டு வந்து மடிக்காமல் தலைக்கு மேல் உயர்த்தவும்.
 3. மெதுவாக முன்னாள் குனிந்து கால்களை மடிக்காமல் கால் விரல்களை தொட முயற்சிக்கவும்.
 4. இரு கைவிரல்களாலும் இரு கால்விரல்களை தொட முயற்சிக்கவும்.
 5. பின் கால் கட்டை விரல்களை பற்றி, மேலும் குனிந்து நெற்றியை கால் முட்டிகளின் மீது வைத்து கைகளை மடித்து கை முட்டியை விரிப்பின் மீது வைக்கவும்.
 6. மூச்சை வெளிவிட்டு குனிகிறோம். மூச்சை அடக்கி ஒரு பத்து வினாடிகள் இருக்கவும்.
 7. பின் மூச்சை வெளிவிட்டு கட்டை விரலை பிரித்து கைகளை நீட்டி மெதுவாக எழுந்து நிமிர்த்து உட்காரவும்.
 8. இவ்வாறு 3 முறைகள் செய்யவும்.
 9. முதலில் பயிற்சி செய்யும் பொழுது கால் விரலை தொடுவதே சிரமமாக இருக்கும்.
 10. ஒரு மூன்று மாதங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். உங்களால் முழுமை நிலையினை அடைய முடியும்.

குறிப்பு:

 1. அடி முதுகு வலி, முதுகு தண்டு கோளாறு உள்ளவர்கள் இவ்வாசனம் செய்ய வேண்டாம்.

பலன்கள்:

 1. கருப்பையில் தோன்றும் வியாதிகள் பூரணமாக சரியாகும்.
 2. பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் அடிவயிறு பெருக்கத்தை இந்த ஆசனம் சரி செய்துவிடும்.
 3. சிறுநீரகம் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும்.
 4. தொடர்ந்து செய்தால் மஞ்சள் காமாலை, புற்று நோய் வராது.
 5. நுரையீரல் பலப்படும்.
 6. தசைவலி, வாதக்கோளாறுகள் நீங்கும்.
 7. பசியின்மை, நீரிழிவு, மலச்சிக்கல் நீங்கும்.
 8. நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறுகின்றது.
 9. ஆண்களுக்கு விந்து ஒழுக்கை தடுக்கும்.
 10. பெண்களின் எண்ணம் திடப்படும். மனோதைரியம் கிடைக்கும்.
%d bloggers like this: