ஹாக்கினி முத்திரை

செயல்முறை:

  1. நமது வலது  கை  விரல் நுனிகளை இடது கை விரல் நுனிகளுடன் இணைந்து தொட வேண்டும்.
  2. ஒரு விரலுக்கும் அடுத்த விரலுக்குமிடையே இடைவெளி இருக்கவும்.
  3. ஒவ்வொரு  விரல் நுனியிலும் லேசான அழுத்தம் கொடுக்கவும்.
  4. கண்களை மூடி நெற்றி புருவ மையத்தில் நினைவை வைத்து மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
  5. முதலில் பயிற்சி செய்பவர்கள் மூன்று நிமிடங்கள் செய்யவும்.
  6. தொடர்ந்து ஒரு மாதம் பயிற்சி செய்த பின் 5 முதல் 10 நிமிடங்கள் பயிற்சி செய்யலாம்.
  7. காலை மாலை இரு வேளையும் செய்யலாம்.

பலன்கள்:

  1. மூளை செல்கள் புத்துணர்ச்சி பெரும்.
  2. பஞ்ச பூதங்களும் சிறப்பாக இயங்கும்.
  3. மன அழுத்தம், கவலை நீங்கும்.
  4. நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்கும்.
  5. வலது மூளை இடது மூளை சிறப்பாக செயல்படும்.
  6. நியாபக சக்தி அதிகரிக்கும்.