மாணவர்கள் நியாபக சக்தி வளர அர்த்த சிரசாசனம்

செய்முறை:

  1. விரிப்பில் முதலில் வஜ்ராசனத்தில் அமரவும்.
  2. அதில் இருந்து எழுந்து, உச்சந்தலை தரையில் படும்படி வைத்து இரு கைகளையும் தலைக்கு பின்னால் கோர்த்துக் கொள்ளவும்.
  3. இரு கால்களையும் கால் பெருவிரல்கள் தரையில் படும்படி குன்று போல் மெதுவாக உயர்த்தவும்.
  4. இந்நிலையில் சாதாரண மூச்சில் 20 வினாடிகள் இருக்கவும்.
  5. பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும்.
  6. இது போல் 3 முறைகள் செய்யவும்.

பலன்கள்:

  1. பிட்யூட்டரி, பினியல் சுரப்பிகள் நன்றாக இயங்கும். அதனால் நியாபக சக்தி நன்கு வளரும்.
  2. படித்தது உள்ளத்தில் பதியும்.
  3. வகுப்பில் பாடம் நடத்தும் பொழுதும் ஆசிரியர் கூறுவது ஆழ்மனதில் பதியும்.
  4. பரீட்சை எழுதும் பொழுது படித்தது மறக்காமல் நினைவுக்கு வரும்.
  5. சோம்பல் நீங்கும்.
  6. மூளை செல்கள் புத்துணர்வுடன் இயங்கும்.
மாணவ செல்வங்களுக்கு உகந்த மிக அற்புதமான ஆசனமாகும். இந்த ஆசனத்தை மாணவர்கள் மட்டுமல்ல, இல்லத்தரசிகள், பெரியவர்கள், அனைவரும் செய்யலாம். யாருக்கெல்லாம் நியாபக மறதி உள்ளதோ அவர்கள் எல்லாம் பயிற்சி செய்து நியாபக சக்தியை வளர்த்துக் கொள்ளலாம்.