ஆஸ்துமாவை அழிக்கும் ஆனந்த யோகம் – மகராசனம்
செய்முறை:
  1. விரிப்பில் குப்புற படுத்துக்கொள்ளவும்.
  2. இரண்டு கைகளையும் முன்னால் கொண்டு வரவும்.
  3. வலது கையை மடித்து இடது தோள்பட்டை மீதும், இடது கையை மடித்து வலது தோள்பட்டையின் மீது வைக்கவும்.
  4. முகத்தை கைகளின் இடையே வைத்து நெற்றி பொட்டை கைகளின் மீது அழுத்தி வைக்கவும்.
  5. கால்களை ஒரு மூன்றடி இடைவெளியில் பிரித்து விலக்கி வைக்க வேண்டும்.
  6. கண்கள் மூடியிருக்க வேண்டும்.
  7. இந்த நிலையில் முப்பது வினாடிகள் முதல் அறுபது வினாடிகள் இருக்கலாம்.
  8. பின்பு கால்களை ஒன்று சேர்த்து கைகளை பிரித்து நீட்ட வேண்டும்.
  9. வலது அல்லது இடது புறமாக புரண்டு ஒருக்களித்து எழுந்து அமர வேண்டும்.
  10. இந்த ஆசனத்தை காலை, மதியம், மாலை மூன்று வேலைகள் செய்யலாம். மிக நல்ல பலன் கிடைக்கும்.
பலன்கள்:
  1. ஆஸ்துமா நீங்கும்.
  2. நுரையீரல் நன்கு இயங்கும்.
  3. இருதயம் பாதுகாக்கப்படும்.
  4. மூச்சு திணறல் நீங்கும்.
  5. நெஞ்சு வலி சரியாகும்.
  6. நாடி நரம்புகள் சிறப்பாக இயங்கும்.
ஆஸ்துமா குணமாக உணவு முறைகள்
  1. அரைவயிறு சாப்பாடு. கால் வயிறு தண்ணீர். கால் வயிறு காலியாக காற்று செல்வதற்கு இடமிருக்க வேண்டும். ஆஸ்துமா உள்ளவர்கள் முழு வயிறு சாப்பிட்டால் அதிக பிராணசக்தி ஜீரணமாவதற்கு சென்றுவிடும். ஏற்கெனவே உடலில் நுரையீரல் பிராண ஓட்டம் சரியாக இல்லை. எனவே அஜீரணமாகி வயிறு உப்பசமாகி உடன் மூச்சு திணறல் வரும். மிகவும் குளிர்ந்த உணவை சாப்பிடாதீர்கள். உடன் சமைத்த சூடான உணவை சாப்பிடுங்கள்.
  2. இரவு சாப்பாடு மிக குறைவாக ஏழு மணிக்குள் சாப்பிடவும். அதுவும் சூரியன் மறையுமுன் ஆறு மணிக்குள் சாப்பிட்டால் மிகவும் நல்லது. பொதுவாக சூரிய வெளிச்சம் இருக்கும் பொழுது உண்ணும் உணவு சூரிய கதிர்களால் விரைவில் ஜீரணமாகும். ஆரோக்கியமாக வாழ நாம் இரவு சாப்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். ஆஸ்துமா உள்ளவர்கள் இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
  3. இரவில் தயிர், பால், குளிர்ந்த பானங்கள் அறவே தவிர்க்கவும்.
  4. இரவில் கீரை தவிர்க்கவும்.
  5. மனதை எப்போதும் அமைதியாக வைத்துக் கொள்ளவும். மன இருக்கம், கோபம் கூடாது.
  6. பூண்டு போட்டு அரிசி கஞ்சி சாப்பிடவும்.
  7. பாலில் மிளகு, மஞ்சள் பொடி போட்டு சாப்பிடவும்.
  8. திருமண விழாவிற்கோ மற்ற விழாவிற்கோ சென்றாலும் இரவு அதிகமாக உண்பதை தவிர்ப்பது நலம்.