சிறுநீரகம், சிறுநீர்ப்பை, பித்தப்பை குழாய்களில் ஏற்படும் கற்களை கரைக்கும் ஜானு சிரசாசனம்

செய்முறை:

  1. விரிப்பில் இரு கால்களையும் நீட்டி அமரவும்.
  2. வலது காலை மடித்து இடது தொடையை உள்ளங்கால் தொடும்படி வைக்கவும்.
  3. குதிகாலை உள்ளே இழுத்து தொடை இணைப்பை தொடும்படி வைக்கவும்.
  4. உங்கள் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி மூச்சை வெளிவிட்டு கொண்டே முன்னால் குனிந்து, நெற்றி கால் முட்டியை தொடும்படி செய்து இடது கால் கட்டை விரலை கைகளால் பிடிக்கவும்.
  5. சாதாரண மூச்சில் இருபது எண்ணிக்கை கண்களை மூடியவாறு இருக்கவும்.
  6. பின் கைகளை பிரித்து நிமிர்ந்து சாதாரணமாக அமரவும்.
  7. ஒரு நிமிடம் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் ஒரு முறை செய்யவும்.
  8. இதே போல் மாற்று ஆசனமாக இடது காலை மடித்து இரண்டு முறை செய்து பின் ஓய்வெடுக்கவும்.
  9. இந்த ஆசனத்தை ஞான முத்திரை என்றும் அழைப்பர்.

பலன்கள்:

  1. நரம்பு மண்டலம், தசைகளும் நன்கு வலிமை பெறுகின்றது.
  2. தூக்கத்தில், சொப்பனத்தில் விந்து வெளியேறுவதை தடுக்கின்றது.
  3. வீரிய குறைபாடுகளை நீக்கி ஆண்மை குறைவை நீக்கும் அற்புத ஆசனம்.
  4. பெண்களுக்கு ஏற்படும் அதிகமாக வெள்ளைப்படுதலை மாதவிடாய் சமயம் தடுத்து சீராக்கி வலிமையை கொடுக்கும்.
  5. போகத்தில் அளவுக்கு அதிகமாக ஈடுபட்டு அதனால் உடலில் வீரியம் இழந்தவர்கள் இவ்வாசனத்தில் மீண்டும் இளமையுடன் வீரிய தன்மை பெற்று வாழலாம்.
  6. நீரழிவு நீக்கி கணையத்தை சிறப்பாக இயங்க செய்யும்.
  7. வயிறு உப்புசம் நீக்கி பசி எடுக்கும்.
  8. உடல் அதிக எடை தொந்தி குறையும்.