செய்முறை:

  1. முதலில் விரிப்பு விரித்து கிழக்கு திசை அல்லது மேற்கு திசை நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
  2. கீழே உட்கார முடியாதவர்கள் மட்டும் நாற்காலியில் அமர்ந்து கொள்ளலாம்.
  3. முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
  4. கண்களை மூடி மெதுவாக மூச்சை உள்ளிழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும் ஒரு நிமிடம்.
  5. இப்போது மோதிரவிரலை மடக்கி அதன்மேல் கட்டைவிரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.
  6. இரு கைகளையும் இதே போல் வைத்து செய்ய வேண்டும்.
  7. இந்நிலையில் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் செய்யலாம்.

பலன்கள்:

  1. தொப்பை குறையும்.
  2. உடலில் கொழுப்பு குறையும்.
  3. மன அமைதி உண்டாகும்.
  4. உடல் அதிக எடை குறையும்
  5. உடல் களைப்பு நீங்கும்.
  6. உடலில் ரத்த ஓட்டம் சீராக பாயும்.
  7. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.