செரியாமை, மலச்சிக்கல் நீக்கும் தனுராசனம் (Indigestion & Constipation Cure Yoga – Dhanurasana)
செய்முறை:
  1. விரிப்பில் கிழக்கு நோக்கி குப்புறப் படுத்துக் கொள்ளவும்.
  2. இரு கால் பாதங்களை முதுகை நோக்கி கொண்டு வந்து, கைகளை பின்னால் கொண்டு வந்து, கைகளால் காலின் கணுக்கால் பகுதியை இருக்கமாக பற்றி பிடிக்கவும்.
  3. தலை, மார்பு, கால்கள் ஒரு சேர உயர்த்தி, மூச்சை உள் இழுத்துத் தூக்கவும்.
  4. அடிவயிறு மட்டும் விரிப்பின் மீது இருக்க வேண்டும்.
  5. மூச்சை அடக்கி பதினைந்து வினாடிகள் இருக்கவும்.
  6. பின் கைகளை பிரித்து கால்களை நீட்டவும்.
  7. சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் செய்யவும்.
  8. மூன்று முறைகள் தினமும் செய்யவும்.
முக்கியக் குறிப்பு:
  1. கல்லிரல் வீக்கம், வயிற்று புண் உள்ளவர்கள் இவ்வாசனத்தை செய்யக்கூடாது.
  2. பெண்கள் கருவுற்ற சமயத்தில் செய்யக்கூடாது.
  3. இருதய பலவீனம், இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் செய்யக்கூடாது.
தனுராசனத்தின் பலன்கள்:
  1. வயிற்று தசைகளுக்கு போதிய அழுத்தம் கிடைப்பதால் வயிற்று உள் உறுப்புக்கள் பலன் பெறுகின்றன.
  2. அஜீரணம், உணவு செரியாமை, மலச்சிக்கலுக்கு முழு நிவாரணம் கிடைக்கின்றது.
  3. உடல் எடை, தொப்பை குறையும்.
  4. வயிற்று பொருமல், உப்பசம், வாயு கோளாறுகள் குணமடையும்.
  5. முதுகுத்தண்டு பலப்படும்.
  6. நுரையீரல் பலப்படும். ஆஸ்துமா குணமாகும்.
  7. நீரிழவு குணமாகும். கணையம் ஒழுங்காக இன்சுலினை சுரக்க செய்யும்.
  8. கூன் முதுகு நிமிரும்.
  9. ரத்த ஓட்டம் சிறப்பாக செயல்படும்.
  10. பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் ஏற்படும் பெருத்த வயிறு குறைக்கும்.
  11. மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.
  12. மாணவர்களுக்கு நியாபக சக்தி அதிகமாகும்.
  13. சோம்பல் நீங்கும்.
  14. அடிக்கடி கோபப்படும் குணத்தை மாற்றிவிடும்.