முகுள முத்திரை

செய்முறை:

  1. விரிப்பில் கிழக்கு நோக்கி வஜ்ராசனம் அல்லது பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் சாதாரணமாக அமரவும்.
  2. உங்களது முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
  3. கண்களை மூடி ஒரு ஐந்து முறை இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளியேவிடவும்.
  4. நமது நான்கு விரல்களையும் கட்டை விரலோடு இணைக்க வேண்டும்.
  5. விரல்கள் மேல் நோக்கியபடி இருக்க வேண்டும்.
  6. லேசான அழுத்தும் விரல்களில் கொடுக்கவும்.
  7. ஐந்து நிமிடங்கள் இரு கைகளிலும் செய்யவும்.
  8. காலை மாலை இரு வேளையும் செய்யலாம்.

பலன்கள்:

  1. மன இருக்கம், மன அழுத்தம் நீக்கும்.
  2. இதயம் பாதுகாக்கப்படும்.
  3. கோபம் குறையும்.
  4. பஞ்ச பூத சக்தி கிடைக்கும்.
  5. உடலில் புத்துணர்ச்சி பெருகும்.
  6. நாளமில்லா சுரப்பிகள் நன்கு இயங்கும்.
  7. பிராண ஓட்டம் நன்றாக இருக்கும்.