ருத்ர முத்திரை

செய்முறை:

  1. விரிப்பில் கிழக்கு திசை நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
  2. உங்களது முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
  3. கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும்.
  4. மூச்சை வெளியிடும்போது நமது உடல், மனதிலுள்ள அழுத்தம், டென்ஷன் உடலைவிட்டு வெளியேறுவதாக எண்ணவும்.
  5. நமது கட்டை விரல், ஆள் காட்டி விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிப்பகுதிகளையும் ஒன்றாக இணைக்கவும்.
  6. அதில் சிறிய அழுத்தம் கொடுக்கவும்.
  7. நடு விரலும் சுண்டு விரலும் நேராக இருக்க வேண்டும்.
  8. இரு கைகளிலும் இதே போல் செய்யவும்.
  9. முதலில் பயிற்சி செய்பவர்கள் 5 நிமிடங்கள் செய்யவும்.
  10. படிப்படியாக 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.

பலன்கள்:

  1. தூய சிந்தனை கிடைக்கும்.
  2. மூச்சோட்டம் சிறப்பாக இயங்கும்.
  3. ஜீரணசக்தி மிக சிறப்பாக இயங்கும்.
  4. சுவாச ஓட்டம் வயிற்றுப் பகுதியில் சீராக இயங்கும்.
  5. மூல வியாதி குணமாகும்.
  6. குடல் இறக்கம் சரியாகும்.
  7. கர்பப்பை பாதுகாக்கப்படும்.
  8. தலை வலி நீங்கும்.
  9. தலை சுற்றல் நீங்கும்.
  10. உடல் சூட்டை சமப்படுத்துகிறது.