லிங்க முத்திரை
செய்முறை:
  1. முதலில் நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் தரையில் ஒரு விரிப்பு விரித்து பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
  2. முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
  3. முதலில் இரு நாசி துவாரத்தின் மூலமாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும்.
  4. ஒரு நிமிடம் இவ்வாறு செய்ய வேண்டும்.
  5. பின்பு இரண்டு கை விரல்களையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடக்கை கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைக்க வேண்டும்.
  6. மற்ற விரல்கள் அனைத்தையும் படத்தில் உள்ளது போல் அழுத்தி இருக்கமாக வைத்து கொள்ள வேண்டும்.
  7. இந்த முத்திரையை 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம்.
  8. முதலில் 5 நிமிடங்கள் செய்யவும்.
  9. படிப்படியாக 10 நிமிடங்கள் செய்யலாம்.
  10. பின்பு ஒரு மாதத்தில் 15 நிமிடங்கள் செய்யலாம்.
பலன்கள்:
  1. சுவாசப்பை  – நுரையீரல் வலுப்படும்.
  2. உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
  3. உடலில் அதிக எடை குறையும்.
  4. அடிக்கடி சளி பிடிப்பது குறையும்.
  5. அடிக்கடி காய்ச்சல் வருவது குறைந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
  6. உடல் சூட்டை சமப்படுத்தும்.
  7. உடலில் உயிரோட்டமும் வெப்ப ஓட்டமும் சீராக இருக்கும்.

Top Rated Products: