இளமைக்கும் வலிமைக்கும் ஆற்றல் தரும் பவன முக்தாசனம்
செயல்முறை:
- தரையில் விரிப்பில் நேராக படுத்து கொள்ளவும்.
- வலது கால் முட்டி பகுதியில் இரு கைகளையும் பிடித்து கொண்டு, வயிற்றை நோக்கி அழுத்தவும்.
- இடது காலை மடிக்காமல், தரையில் நேராக வைக்கவும்.
- தலையை உயர்த்தி எழுந்து, முகவாய் கட்டையை வலது கால் முட்டியை நோக்கி கொண்டு வந்து சேர்க்கவும்.
- மூச்சை இழுத்து கொண்டு வந்து மூச்சடக்கி 10 முதல் 15 வினாடிகள் இருந்துவிட்டு பின் விரிப்பின் மீது படுக்கவும்.
- பின் காலை மாற்றி செய்யவும்.
- வலது, இடது கால் என மாற்றி மூன்று முறைகள் செய்த பிறகு ஒரு நிமிடம் ஓய்வெடுக்கவும்.
பலன்கள்:
- வாயு கோளாறுகள் நீங்கும்.
- மலச்சிக்கல் நீங்கும்.
- மாரடைப்பு நோய் வராது.
- மூல வியாதி நீங்கும்.
- ரத்த கோளாறுகள் நீங்கும்.
- குடல் வாழ்வு கோளாறுகள் நீங்கும்.
- கருப்பை கோளாறுகள் பெண்களுக்கு நீங்கும்.
- அதிக வயிற்று தசை குறையும்.
- என்றும் இளமையாக வாழலாம்.
- சுறுசுறுப்பாக திகழலாம்.
- ராஜ உறுப்பான இதயம் பாதுகாக்கப்படும்.