அனுசாசன முத்திரை
செய்முறை:
- விரிப்பில் கிழக்கு நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
- முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
- கண்களை மூடி மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியே விடவும்.
- ஒரு ஐந்து முறைகள் இவ்வாறு செய்யவும்.
- இப்போது ஆள்காட்டி விரலை வளைக்காமல் நேராக வைத்து கொண்டு, நடுவிரல் மோதிர விரலை சுண்டு விரல் ஆகியவற்றை பெருவிரலுடன் இணைத்து வைக்கவும்.
- இரு கைகளிலும் இது மாதிரி செய்யவும்.
பலன்கள்:
- ஒரு மண்டலம் தொடர்ந்து செய்து வந்தால் பஞ்ச பூதங்களும் உடலில் சரியாக இயங்கும்.
- ஐம்புலன்களும் அடங்கும்.
- மனம் ஒடுங்கும், மன அமைதி கிடைக்கும்.
- கழுத்து வலி நீங்கும்.
- தியானம் கைகூடும்.
- கழுத்து முதுகு வலி, நடு முதுகு வலி, அடிமுதுகு வலி நீங்கும்.