ருத்ர முத்திரை
செய்முறை:
- விரிப்பில் கிழக்கு திசை நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
- உங்களது முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
- கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும்.
- மூச்சை வெளியிடும்போது நமது உடல், மனதிலுள்ள அழுத்தம், டென்ஷன் உடலைவிட்டு வெளியேறுவதாக எண்ணவும்.
- நமது கட்டை விரல், ஆள் காட்டி விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிப்பகுதிகளையும் ஒன்றாக இணைக்கவும்.
- அதில் சிறிய அழுத்தம் கொடுக்கவும்.
- நடு விரலும் சுண்டு விரலும் நேராக இருக்க வேண்டும்.
- இரு கைகளிலும் இதே போல் செய்யவும்.
- முதலில் பயிற்சி செய்பவர்கள் 5 நிமிடங்கள் செய்யவும்.
- படிப்படியாக 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்:
- தூய சிந்தனை கிடைக்கும்.
- மூச்சோட்டம் சிறப்பாக இயங்கும்.
- ஜீரணசக்தி மிக சிறப்பாக இயங்கும்.
- சுவாச ஓட்டம் வயிற்றுப் பகுதியில் சீராக இயங்கும்.
- மூல வியாதி குணமாகும்.
- குடல் இறக்கம் சரியாகும்.
- கர்பப்பை பாதுகாக்கப்படும்.
- தலை வலி நீங்கும்.
- தலை சுற்றல் நீங்கும்.
- உடல் சூட்டை சமப்படுத்துகிறது.