21
Jun
அஷ்டாங்க யோகத்தின் 8 படிகள் விளக்கம்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 007
ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உடல் ஆரோக்கியமாகவும் உள்ள அமைதியாகவும் வாழவும், தன்னை உணரவும், தனக்குள் இறுக்கும் பேராற்றலை உணரவும் ஒரே வழி ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி அருளிய அஷ்டாங்க யோகம் என்ற 8 படிகளே வாழ்வின் வெற்றிப்படி என எளிமையாக விளக்கியுள்ளார்.
1. இயமம்
மனம் சம்பந்தப்பட்ட ஒழுக்க நியதிகள். முக்கியமான கட்டுப்பாடுகள் அஹிம்சை, சத்தியம், பிரம்மச்சரியம், அஸ்தேயம், பேராசையின்மை போன்ற அடிப்படை மனித பண்புகளை வளர்க்க வேண்டும்.
2. நியமம்
இதுவும் மனம் சார்ந்த ஒழுக்க கோட்பாடுகள் – அகத்தூய்மை, புறத்தூய்மை, தவம், புனித நூல்கள் படித்தல், இறைவனிடம் சரணாகதி முதலியவற்றை விளக்குகிறது.
3. ஆசனம்
ஆசனம் என்றால் என்ன? ஒவ்வொரு நோயையும், யோகாசனம் எப்படி குணப்படுத்துகின்றது? ஆசன விதிமுறைகள் என்ன? மாணவர்களுக்கு ஆசனம் எப்படி உதவுகின்றது? பெரியவர்களுக்கு, பெண்களுக்கு எப்படி உதவுகின்றது? என்பது விளக்கப்படுகின்றது. நீரிழிவு, இரத்த அழுத்தம், கழுத்து வலி, மூட்டு வலி, முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி ஆசனத்தில் உள்ளது.
4. பிராணாயாமம்
பிராணன் என்றால் என்ன? இது மனிதனின் ஆயுளை எப்படி அதிகரிக்கும்? மனம் ஒருமைப்பட எப்படி பிராணாயாமம் உதவுகிறது? இதயம் நுரையீரலை எப்படி பாதுகாக்கிறது? என்ற விளக்கம் உள்ளது.
5. பிரத்தியாகாரம்
இது முழுக்க முழுக்க மனதை உள்முகமாக திருப்பும் பயிற்சி. நமது ஆன்ம ஆற்றலை உணர வைக்கும் பயிற்சி.
6. தாரணை
மனதை ஒரு பொருளில் குவிய செய்தல். அதன் மூலம் எண்ணற்ற ஆற்றலை அடையலாம். தாரணை கை கூட வைராக்கியம், சாத்வீக உணவு, தனித்திருத்தல் முதலியவை தேவை.
7. தியானம்
ஒரே சிந்தனை. தாரனையின் முடிவு தியானமாகும். மன அமைதி. இதயம் பாதுகாக்கப்படும். எந்த நோயும் வராது. தியானம் கைகூடினால் எல்லாம் கைகூடும்.
8. சமாதி
ஆதியில் சமம். எண்ணமற்ற நிலை. மனம் கரைந்த நிலை. மௌன நிலை. பேரின்ப நிலை. இதுவே நம் உண்மை இயல்பு.
அஷ்டாங்க யோக எட்டு படிகளை அனைவரும் கடை பிடிக்கலாம். ஆனந்த வாழ்வு வாழலாம்.