17
Mar
தகாத வழியில் வீரியம் இழந்தாலும் மீண்டும் இனப்பெருக்க உறுப்புகள் சிறப்பாக இயங்கவும், உயிர்சக்தி வீரியத்துடன் திகழவும், ஆண்மைக் குறைவை நீக்கவும் யோகத்தில் ஓர் அருமையான ஆசனம் உள்ளது. அது தான் சர்வாங்காசனம்.
பெயரைப் பிரித்துப்பாருங்கள் சர்வ அங்க ஆசனம் என்று வருகிறதா? மனிதனின் உடலில் உள்ள சர்வ அங்கங்களிலும் உள்ள குறைபாடுகளை நீக்கி, ஆண்மையுடனும், இளமைத் துடிப்புடனும் வாழச் செய்யும் ஆசனம் இது. அதனால்தான் கிழவனையும் குமரன் ஆக்கும் ஆசனம் என்று இதைச் சொல்வார்கள்.
சர்வாங்காசனம் செய்முறை:
- விரிப்பின் மீது கால்களை ஒன்று சேர்த்து படுக்கவும்.
- கால்களை 90 டிகிரிக்கு உயர்த்தவும்.
- இப்போது உங்கள் உள்ளங்கைகளை அழுத்தி இடுப்பை பூமியிலிருந்து உயர்த்தி கால்களை வானத்தை நோக்கி கொண்டு வரவும்.
- கைகளை மடக்கி உள்ளங்கைகளால் இடுப்பை பிடித்து கால்களை 90 டிகிரிக்கு உயர்த்தவும்.
- உடம்பும் கால்களும் ஒரே நேர்கோட்டில் வரும்படி உடல் பளுவை தோள் பட்டைகளில் வைத்து சரிசெய்ய வேண்டும்.
- கை முட்டிகள் தரையின் மீது இருக்க வேண்டும்.
- 50 முதல் 100 எண்ணிக்கை வரை அப்படியே ஆடாமல் அசையாமல் இதே நிலையில் இருக்க வேண்டும்.
- பிறகு கண்களைத் திறந்து கால் விரல்களைப் பார்க்க வேண்டும்.
- பின் கால்களை மெதுவாக பூமியை நோக்கிப் பின்புறமாக கொண்டு வந்து முதுகில் உள்ள கைகளை பிரித்து விரிப்பின்மீது மெதுவாக முதுகை வைத்துப் படுத்து, கால்களை விரிப்பின் மீது வைக்கவும்.
- சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு திரும்பவும் செய்ய வேண்டும்.
- 2 முறை செய்துவிட்டு சுகாசனத்துக்கு உடம்பை கொண்டுவரவும்.
இந்த சர்வாங்காசன த்துக்கு ஒரு மாற்றாக மச்சாசனம் செய்தாலும் நலம் கிடைக்கும்.
மச்சாசனம் செய்முறை:
- விரிப்பில் நேராகப் படுத்துக்கொள்ளவும். இரு கால்களும் சேர்ந்து இருக்கட்டும்.
- கைகளை பக்கவாட்டில் வைக்கவும்.
- கைகளின் உதவியால் தலையை, அதாவது உச்சந்தலையை தரையில் படும்படி வளைத்து இரு கைகளையும் இரு கால் தொடை மீது வைத்து சாதாரண மூச்சில் 20 வினாடிகள் இருக்கவும்.
- பின்னர் இரு கைகளின் உதவியால் தலையை மெதுவாக நேராக விரிப்பில் வைக்கவும்.
ஆண்மைக் குறைபாடு நீக்கும் உணவுமுறைகள்:
பருப்பில்… பாதாம் பருப்பு, உளுந்தம்பருப்பு, பிஸ்தா, கொண்டைக்கடலை. பழங்களில்…. உலர்ந்த திராட்சை, காய்ந்த பேரீச்சம்பழம், செவ்வாழை, திராட்சை, அன்னாசி, பலா, மாம்பழம், அத்திப்பழம், மாதுளை, அரசம்பழம். கீரைகளில்… முருங்கைகீரை, அம்மான் பச்சரிசி கீரை, கொடிப்பசலைகீரை, தவசிக்கீரை, கொத்துமல்லி, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, பசலைக்கீரை. காய்கறிகளில்… நெல்லிக்காய், ஜாதிக்காய். பூக்களில்… செம்பருத்தி, முருங்கைப்பூ, மகிழம்பூ ஆகியவை நல்லது.
சர்வாங்காசனத்தின் மற்ற பலன்கள்
- தைராய்டு பாராதைராய்டு சிறப்பாக இயங்கும்.
- ரத்த ஓட்ட மண்டலம், மூச்சு மண்டலம், ஜீரண மண்டலம் ஆகியவை சிறப்பாக செயல்படும்.
- மர்ம ஸ்தானம், குதம் ஆகிய இடங்களில் தோன்றும் வியாதிகள் குணமாகும்.
- கிட்னி கோளாறுகள் சரியாகும்
- ரத்தம் சுத்தமடைவதால் வெண்குஷ்டம் போன்ற தோல் வியாதி நீங்கும்.
- முகத்தில் சுருக்கங்கள் நீங்கி இளமையுடன் வாழலாம்.
- பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். அடிக்கடி அபார்ஷன் ஏற்படுதல், குழந்தையின்மை போன்றவை நீங்கும்.
- ஆஸ்துமா, கல்லீரல் கோளாறுகள், சர்க்கரை வியாதிகள் நீங்கும்.
- முடி கொட்டுதல், இளநரையை கட்டுப்படுத்தும்.
முக்கியக் குறிப்பு
இதயம் சம்பந்தமான வியாதி உள்ளவர்கள, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், அதிக எடை உள்ளவர்கள், யோகா பயிற்சியாளரிடம் சென்றே இந்த யோகாசனங்களை செய்யவேண்டும்.