03
Jul
குண்டலினியும் சக்ரா தியானமும்
Kundalini and Chakra Meditation
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 008
சக்ரா தியானம்
இந்த சக்ரா தியானம் செய்தால் குண்டலினி சக்தி மேல் ஏறும் விதத்தை எளிமையாக விளக்கியுள்ளார் . இதனால் இந்த உடல் அழியா நிலையை எய்துகின்றது.
சக்ரா தியானமும் காயகல்பமும்
இந்த சக்ரா தியானமே காயகல்ப வித்தையாகும். காயம் = உடல், கல்பம் = அழியா நிலை. உயிர் சக்தியை மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரை பரவ செய்தல் காய கல்ப வித்தையாக மாறுகிறது. உடல் ஒளி உடலாக திகழ்கின்றது. அதன் முறை விளக்கப்பட்டுள்ளது.
அனைத்து நோய்க்கும் முற்றுப்புள்ளி சக்ரா தியானம்
இந்த சக்ரா தியனம் மூலம் உடலில் உள்ள எல்லா நாளமில்லா சுரப்பிகளும் நன்கு அதனதன் விகிதத்தில் சுரக்கும். அதனால் நோயற்ற வாழ்வு வாழலாம் எல்லா நோயும் நீங்கி வாழ இந்த தியானம் வழிவகுக்கும்.
உடலில் உள்ள ரகசிய அதிசய மையங்கள்
மனித உடலில் அபூர்வமான மையங்கள் உள்ளன. அதனையே சக்கரங்கள் என்று கூறுகிறோம். இதற்கும் நாளமில்லா சுரப்பிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒவ்வொரு சக்கரமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இரத்த அழுத்தம், நீரிழிவு நீக்கும் சக்ரா தியான முறை விளக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம் (STRESS)
மன அழுத்தம் நீங்க எப்படி தியானிப்பது என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மன அழுத்தமின்றி வாழலாம். இதயம் பாதுகாக்கப்படும்.
இதயம் பாதுகாக்க
இதயம் சிறப்பாக இயங்க அனாகத சக்ரா தியானம் விளக்கப்பட்டுள்ளது.
முதுகு வலி
முதுகு வலி நீங்க எப்படி சக்ரா தியானம் செய்வது என்பது விளக்கப்பட்டுள்ளது.
ஆன்ம தரிசனம்
மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரம் வரை நமது பிராண ஆற்றலை எப்படி மேல்நோக்கி கொண்டு வருவது. அதன் மூலம் ஆன்ம தரிசனம் பெறும் முறை எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் எல்லோரும் பயிலும் எளிமையான முறையில் தியான முறை விளக்கப்பட்டுள்ளது. சங்கடங்கள் நீங்க இந்த சக்ரா தியானம் பயிலுங்கள்.