07
Aug
ஞாபக சக்தி அதிகரிக்கும் ஹாக்கினி முத்திரை
முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் – Episode 010
ஞாபக சக்தி (Memory Power)
இந்த முத்திரை ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கின்றது. மாணவர்களுக்கு, படித்த பாடங்கள் நினைவில் இருக்க செய்யும். நினைவாற்றலை மேம்படுத்துகின்றது.
மூளையின் வலப்பக்கம்
மூளையின் வலப்பக்கத்தில் நினைவுகள் பாதுகாக்கப்படுகிறது. அவைகளை திறக்க உதவுகின்றது.
மன ஒருமைப்பாடு
மனம் ஒரு நிலை அடையும். தியானம் கைகூடும். கவன சிதறல் குறையும்.
பஞ்ச பூதம் சமநிலை
எல்லா விரல்களும் இணைவதால் பஞ்சபூதமும் சமப்படும்.
வலது, இடது மூளை
இந்த முத்திரை வலது, இடது மூளையை நன்கு இயங்க செய்கிறது. மாணவர்கள் இதை பயின்றால் நல்ல பலன் கிடைக்கும்.
நுரையீரல் இயக்கம்
இந்த முத்திரை நமது நுரையீரலை நன்கு இயங்கச் செய்யும். அதில் உள்ள குறைபாட்டை நீக்குகிறது.
மன அழுத்தம்
மன அழுத்தத்தை நீக்கி மன அமைதியை தருகின்றது.