23
Sep
திக்குவாய் பிரச்சனை தீர்த்து கம்பீர குரல் வளம் தரும் பிராமரி பயிற்சி
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் – Episode 016
திக்குவாய்
பேசுவதற்கு முடியாமல் திக்கிப் பேசுபவர்கள் இந்த பயிற்சியை செய்தால் மிக நல்ல பலன் தரும். பேசும் திறன் கைகூடும். குரல் வளம் தரும் பயிற்சி இது.
தைராய்டு
தைராய்டு – பாரா தைராய்டு பிரச்சனை சரியாகும். உடல் பருமனை சரி செய்கிறது. உடல் மெலிந்தவர்கள் செய்தால் வயதிற்கேற்ப உடல் பருமனை தரும்.
பள்ளி மாணவர்களுக்கு
மாணவ செல்வங்களுக்கு இந்த பயிற்சி நல்ல நினைவாற்றலை தருகின்றது. அறிவில் மலர்ச்சியை தருகின்றது.
நேர்முக அதிர்வலைகளை (Positive Energy)
உடல் முழுக்க நேர்முகமான எண்ண அதிர்வலைகளை கொடுக்கின்றது. இதனால் தன்னம்பிக்கையும் உற்சாகமும் பிறக்கின்றது.
பிராண ஆற்றல்
உடல் முழுக்க நல்ல பிராண ஆற்றல் கிடைக்கின்றது. அதனால் உடல். மன இயக்கம் நன்றாக அமைகின்றது.