பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் – பகுதி 010
உங்கள் குழந்தைகளுக்கு உற்சாக மூட்டும் யோகா
இன்றைய சூழ்நிலை
இன்று நம் நாட்டில் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை, ஆன்லைனில் பாடம் நடைபெறுகிறது, இதனால் உங்கள் குழந்தைகள் காலையில் எழுவதில்லை. நேரம் கழித்து எழுகின்றனர். உணவில் ஒழுக்கமில்லை, சோம்பல் அதிக எடை ஏற்பட்டுள்ளது.
குழந்தையுடன் பெற்றோர்கள் உடல் மன பயிற்சி
பெற்றோர்கள் காலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை உங்கள் குழந்தைகளுடன் வீட்டில் நடைப்பயிற்சி, குதித்தல், ஓடி விளையாடுதல் வீட்டிற்குள்ளயே விளையாடுங்கள்.
எளிய முத்திரை
குழந்தைகளுக்குகந்த எளிய முத்திரை சின் முத்திரை, ஹாக்கினி முத்திரை பயிலுங்கள்.
வஜ்ராசனம்
வஜ்ராசனம் கற்றுக் கொடுங்கள்.
நாடிசுத்தி
எளிய நாடிசுத்தி கற்றுக்கொடுங்கள். விளக்கமாக கொடுத்துள்ளோம்.
காலை மாலை அரைமணி நேரம் உங்கள் குழந்தைகளுடன் பெற்றோர்களும் சேர்ந்து உடல் மன பயிற்சி செய்தால் குழந்தையின் ஆரோக்கியமும் உங்களின் ஆரோக்கியமும் நலமாக இருக்கும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji